தொண்டையில் கட்டும் கபத்தைத் துரத்தும் பண்டைச் சீதத்தைப் பராக்கடிக்கும் கெண்டை விழிப் பெண்ணே!
சளி இருமல் போன்ற பிரச்சனைகளை உடனே குணமாக சிற்றத்தை பயன்படுத்தி ஒரு அருமருந்து எப்படி செய்யலாம் என்று மருத்துவர் கூறுவது பற்றி பார்ப்போம்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மிதமாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் சிற்றத்தை சிலவற்றை லேசாக இடித்து அந்த சுடுதண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதில் மிகவும் மிதமான காரத்தன்மை தான் இருக்கும் அதனால் சாதாரணமாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
குடிநீராக குடிக்காத குழந்தைகளுக்கு சிற்றத்தை பொடி செய்து தேனில் சேர்த்து ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.
சிற்றத்தை பேரரத்தை என்று இரண்டு உள்ளது. எனவே வாங்கும் போது சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
சிற்றத்தை மருத்துவ பலன் பலன்கள்:
மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை குணப்படுத்த இது உதவும்.
- அலர்ஜி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும் குறிப்பாக மார்பக புற்றுநோய் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- கல்லீரல் திசுக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சளி இருமல் உடனே குணமாக அருமருந்து இது ! cough cold home remedies!
- இரத்தக்குழாய்கள் விரிவடையும் இதனால் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- தொடர் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் கூட சிற்றத்தை கடித்து சாப்பிடுவதன் மூலம் இருமல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
- பல்துலக்கிய பின் 10 நிமிடம் இந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளித்தால் பல் சொத்தை,வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் வராது.
- உடலில் அதிகம் உள்ள கொழுப்பை குறைக்கவும் சிற்றத்தை உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“