நீண்ட நாட்களாக நெஞ்சில் கட்டி இருக்கும் சளியை எப்படி வெளியேற்றுவது என்று பார்ப்போம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கஷாயம் போதும் நீண்ட நாட்களாக நெஞ்சில் கட்டி இருக்கும் சளி, மண்டையில் கோர்த்துள்ள நீர், அதிக இருமல், மூச்சு விடுவதில் பிரச்சனை, மூக்கில் சளி ஒழுகுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கும். உடலில் மொத்த சளியையும் கரைத்து மலம் வழியாக இந்த கசாயம் வெளியேற்றிவிடும்.
தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி
பூண்டு
கிராம்பு
ஏலக்காய்மிளகு சீரகம் துளசி (தேவைப்பட்டால்)
இஞ்சி
மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் கற்பூரவள்ளி இலையை கழுவி சேர்க்கவும். அதில் ஒரு பல் பூண்டு, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், 10 மிளகு, அரை டீஸ்பூன் சீரகம், துளசி, இஞ்சி சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். நன்கு அரைந்து வந்ததும் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் ஒரு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
கொதி வரும்போது அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். இதை மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும் காரத்தன்மை அப்போதுதான் அதிகரிக்கும்.
நன்கு கொதி வந்ததும் வடிகட்டி குடிக்கலாம்.
நெஞ்சில் கட்டிருக்கும் சளியை ஒரேநாளில் மலம் வழியே கரைந்து வெளியே வர கஷாயம்!Best home remedy for cold
தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த கசாயத்தை குடித்து வர நெஞ்சு சளி நீங்கும். இந்த கசாயத்தை இரவில் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். இந்த கசாயம் குடித்த பிறகு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. காலையில் சளி கரைந்து மலத்துடன் வெளியேறிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“