உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர். அவர்கள் சுகரைக் குறைக்க காலையில் 20 நிமிஷம், மாலையில் 20 நிமிஷம் நடக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி அதோடு சேர்த்து குடிக்க வேண்டிய ஒரு டீ பற்றியும் டாக்டர் மைதிலி கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சாலை ஓரங்களில் நிறைய நிறங்களில் பேப்பர் பூ இருக்கும். இவற்றை வைத்து டீ செய்து குடிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார். இந்த பேப்பர் பூ சளி இருமல், தொண்டை கரகரப்பு, எலும்புகளை உறுதி செய்யும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
கலர் கலர் காகித பூ வைத்து டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காகிதப்பூ
தேன்
தண்ணீர்
செய்முறை
15 காகிதப்பூவை எடுத்து கழுவி சுத்தம் செய்து உள்ளே இருக்கும் வெள்ளை பகுதியை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 1 கிளாஸ் வரும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும்போது ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம்.
காகித பூக்களுக்கு இப்படி 1 சக்தியா? Paper flower tea benefits for cough / Bougainvillea flower uses
காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலையில் குடிக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு வேளை என்று குடிக்கலாம்.
இந்த டீ சளி, இருமல், தொண்டை கரகரப்பு பிரச்சனையை சரிசெய்யும். எலும்பு வலுவடையும். அதுமட்டுமின்றி டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.