ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம், முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாகும். எனவே ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுவது பற்றி பார்ப்போம்.
சைவம் சாப்பிடுகிறவர்களில் உடல் சத்துக்காக முட்டை சாப்பிடுறவங்க நிறைய பேர் இருக்காங்க. மேலும் ஒன்பது மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க ஆரம்பிக்கலாம். மஞ்சக்கரு, வெள்ளை கரு எல்லாமே தயங்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. ஒரு முட்டையில் 180 மி.கிராம் கொழுப்புசத்து உள்ளது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை கொழுப்புச் சத்தை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான பிரச்சனைகளும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படாது.
ஒரு நாளைக்கு முட்டை சாப்பிடுவோர்களின் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும்.
உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சமைத்த முட்டையை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது. வேக வைத்தது, ஆம்லட், புர்ஜி, தோசை என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். முட்டையில் கலோரி குறைவு என்பதால் பயமின்றி எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம். பெரியவர்கள், கொலஸ்ட்ரால் இருக்கும் பட்சத்தில் வாரத்தில் 3 நாள்களுக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம். புரதத் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று வெள்ளைக் கரு கூட எடுத்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“