நீண்ட நாள் மலச் சிக்கல்? நைட் தூங்கும் முன் இந்தப் பொடி; இவ்வளவு குடித்தால் போதும்: டாக்டர் ஜோன்ஸ் செங்கோட்டையன்
மலச்சிக்கல் பிரச்சனைக்கு எவ்வாறு இயற்கையான முறையில் தீர்வு காணலாம் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அந்தக் குறிப்புகளை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு எவ்வாறு இயற்கையான முறையில் தீர்வு காணலாம் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அந்தக் குறிப்புகளை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குடலில் நச்சுகளும் கழிவுகளும் சேர்வதால் மலச்சிக்கல், ஒழுங்கற்ற குடல் இயக்கம் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நச்சுகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் தோல் பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் கூறுகிறார். இது தொடர்பான தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
குடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை அகற்றவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடல் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். சரியான முறையில் சுத்தம் செய்வது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
நிலவாரை, குடலை இயற்கையாக சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும், 1950 களில் நவீன மருத்துவத்திலும் கூட பயன்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான மருத்துவ தாவரம் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் கூறுகிறார்.
அந்த வகையில், 5 கிராம் நிலவாரை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கவும். தேவைப்பட்டால் அளவை 10 கிராம் வரை அதிகரிக்கலாம். இதனால் குடல் இயக்கம் சீராக நடைபெறும். வழக்கமான குடல் இயக்கத்திற்கு தினமும் இரவு அரை முதல் முக்கால் ஸ்பூன் வரை இதனை எடுத்துக்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
எனினும், 2-3 மாதங்களுக்கு மேல் தினமும் இதை பயன்படுத்த வேண்டாம். இது எலக்ட்ரோலைட் இழப்பு, எடை இழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் அறிவுறுத்துகிறார். 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை எடுக்கக்கூடாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்கள் எடுக்கும் அளவில் பாதி கொடுக்கவும். குடல் புண், வயிற்று எரிச்சல் அல்லது குடல் அடைப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.