மலச்சிக்கல் ஏற்பட்டால் நம்மால் அன்றாட வேலைகள் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இந்நிலையில் மலச்சிக்கலுக்கு நாம் வீட்டிலேயே தீர்வு காண முடியும்.
இசாப்கல் (isabgol) என்று அழைக்கப்படும் ஒரு வகை பொடியை தண்ணீரில் 2 ஸ்பூன் சேர்த்து குடித்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்.
இதுபோல் திரிபலாவை பொடித்து, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

ஓமத்தில், வாய்யு தொடர்பான ஜூஸ்-சை கூடுதலாக சுரக்க உதவுகிறது.இதனால் வயிற்றில் இருப்பது எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ½ டேபிள் ஸ்பூன் ஓமத்தை இரவில் ஊர வைத்து, சுடு தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், இரவு தூங்கப்போகும் முன் குடித்தால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஆனால் இதை கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்த கூடாது.