பாசிப்பயறில் உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டால் அவர்களுக்கு பாசிப்பயிறில் இணந் ஒரு டிஷ் செய்து கொடுங்கள். பாசிப்பருப்பில் ஈரல் வறுவல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி செய்து காட்டியிருப்பதை செய்யலாம்.
சக்கரசாதமும் வடகறியும் என்ற யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு
பச்சை மிளகாய்
மிளகு
சீரகம்
உப்பு
எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஸ்டார் சோம்பு
பிரியாணி இலை
ஏலக்காய்
கறிவேப்பிலை
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
உப்பு
மிளகுத்தூள்
செய்முறை
இரவு முழுவதும் ஊறவைத்த் பச்சைபயரில் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தவுடன் ஆறவைத்து அதை சிறு துண்டுகளாக வெட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
குக்கு வித்து கோமாளி
பின்னர் அதில் முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித்தூள், கரம் மசாலாத் தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
அடுத்ததாக மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து நறுக்கி வைத்துள்ள பாசிப்பயிறு துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சூப்பர் சுவையில் பாசிப்பயறு ஈரல் வறுவல் தயாராகிவிடும்.