2 கப் கோதுமை மாவு போதும்… வீட்டிலேயே ஈஸியா பிஸ்கட் செய்யலாம்; சிம்பிள் ரெசிபி

இரண்டு கப் கோதுமை மாவு இருந்தால் போதும், வீட்டிலேயே சுலபமாக பிஸ்கட் செய்யலாம். இதற்கான எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

இரண்டு கப் கோதுமை மாவு இருந்தால் போதும், வீட்டிலேயே சுலபமாக பிஸ்கட் செய்யலாம். இதற்கான எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
cookies

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க். 

அப்படி இந்த சம்மரில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கோதுமை மாவில் டீ கடை சால்ட் பிஸ்கட் செய்வது எப்படி என்று தமிழ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பிஸ்கட்டை இனி வீட்டிலேயே சுலபமாகத் தயாரிக்கலாம். வெறும் 2 கப் கோதுமை மாவு இருந்தாலே போதும், மொறுமொறுப்பான மற்றும் சுவையான பிஸ்கட்கள் தயார்! இதோ, உங்கள் வீட்டு சமையலறைக்காக ஒரு எளிய செய்முறை:

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
ரவை - 3 ஸ்பூன் (சிறியது)
வெள்ளை எள் - 2 ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 10 கிராம் (சுவைக்கு)
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 5 ஸ்பூன் (உருக்கியது)
சர்க்கரை - 1 கப்
பால் - ¾ கப் (வெதுவெதுப்பானது)

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, வெள்ளை எள், உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உருக்கிய நெய்யை மாவு கலவையில் ஊற்றி, உங்கள் விரல்களால் நன்கு பிசைந்து விடவும். நெய் மாவோடு சேர்ந்து உதிரி உதிரியாக வரும் வரை பிசையவும்.

மற்றொரு சிறிய கப்பில், சர்க்கரையை வெதுவெதுப்பான பாலில் போட்டு சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பால் சர்க்கரை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையில் சேர்த்து, கெட்டியான மற்றும் மிருதுவான மாவாகப் பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்பவும் இளகலாக இருக்கக் கூடாது.

பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் உங்களுக்கு தேவையான தடிமனுக்குத் தேய்க்கவும். ரொம்ப மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இல்லாமல் சீராகத் தேய்க்கவும். பிஸ்கட் வெட்டும் கருவி அல்லது ஒரு சிறிய மூடியைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த வடிவங்களில் பிஸ்கட்களை வெட்டி எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும். எண்ணெய் சரியான சூட்டில் வந்ததும், வெட்டி வைத்துள்ள பிஸ்கட்களைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை குறைந்த முதல் நடுத்தர தீயில் பொரிக்கவும். பிஸ்கட்கள் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான கோதுமை பிஸ்கட்கள் தயார். இந்த செய்முறையில் சுமார் 20 பிஸ்கட்கள் வரை கிடைக்கும். சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ பரிமாறலாம். டீ டைம் ஸ்நாக்ஸாகவோ அல்லது குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவோ கொடுக்க இது ஒரு சிறந்த தேர்வாகும். 

wheat Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: