அசைவ வகைகளில் பல வெரைட்டி உணவுகள் உள்ளன. சிக்கன், மட்டன், மீன், காடை எனப் பல வகைகள் உள்ளன. விதவிதமாக செய்து சாப்பிடலாம். குறிப்பாக சிக்கன் பலருக்கும் பிடிக்கும். சிக்கன் ப்ரை, சிக்கன் 65, சிக்கன் சில்லி, சிக்கன் குழம்பு எனப் பலவிதங்களில் செய்யலாம். சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இந்நிலையில் கொத்தமல்லி கொண்டு புதுவித சிக்கன் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டுகள் -1 கிலோ
கொத்தமல்லி இலை -2 கட்டு
புதினா இலை -1 கட்டு
வெங்காயம் -3
இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4
தயிர் 250 மில்லி லிட்டர்
தனியா தூள் 3 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி இலை, புதினா இலைகளை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தயிர் சிறிதளவு எடுத்து அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து சிக்கனை சுத்தம் செய்து தயரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சை மிளகாய், சீரகம், தனியா தூள் சேர்க்கவும். தயரில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை வடித்து எடுத்து கடாயில் போட்டு நன்கு வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை இப்போது சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும். இப்போது கடாயை மூடி கொண்டு மூடி வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மல்லி சிக்கன் ரெடி. சூடாக பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/