கொத்தமல்லி சட்னி யாருக்கு தான் பிடிக்காது. எல்லாருக்குமே கொத்தமல்லி சட்னி பிடிக்கும். ஆனா அந்த சட்னியை இன்னும் சுவையா எப்படி செய்யலாம்? அப்படின்றது தான் இங்க பாக்கப்போறோம்..
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
பச்சை மிளகாய்
தக்காளி
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
உப்பு
கடுகு
எண்ணெய்
ஒரு பேன்ல 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அது காஞ்ச பிறகு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு போட்டு அது கொஞ்சம் சிவந்து வந்த பிறகு 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விடனும். சின்ன வெங்காயத்துக்கு பதிலா பெரிய வெங்காயம் கூட பயன்படுத்திக்கலாம்,
இதுல காரம் கொஞ்சம் கூடுதலா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். உங்க காரத்துக்கு ஏத்த மாதிரி நீங்க பச்சை மிளகாவை கூட குறைக்கவோ சேர்த்துக்கலாம். ஒரு சின்ன சைஸ் துண்டு இஞ்சி சேர்த்துட்டு நல்லா வதக்கி விட்டு ஒரு சின்ன நெல்லிக்காய் சைஸ் அளவுக்கு புளி சேர்த்துக்கலாம்.
இப்ப எல்லாத்தையும் சேர்த்து நல்லா வதக்கி விட்டுக்கோங்க. அந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாமே நல்லா வதங்கி வந்த பிறகு ரெண்டு கைப்பிடி அளவுக்கு பிரஷ்ஷான கொத்தமல்லி இலைகளை கழுவிட்டு அதையும் இப்ப அது கூட சேர்த்துக்கலாம். காம்போட சேர்க்கும்போது ரொம்ப டேஸ்டாவும் நல்ல மனமாகவும் இருக்கும். முக்கியமா இந்த காம்புகள்ல தான் அதிகமான சத்துக்களும் இருக்கு நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கு.
ஒரு 30 செகண்ட் நல்லா வதக்கி விட்டுட்டு ஸ்டவ்வ ஆஃப் பண்ணிடுங்க. அந்த ஹீட்லயே அந்த கொத்தமல்லி நல்லா வதங்கி வந்துரும் அப்பதான் பசுமை மாறாம டேஸ்டும் நல்லா இருக்கும். இப்ப இதுல கால் கப் அளவுக்கு தேங்காய் துருவல் சேர்த்துட்டு நல்ல ஒரு முறை கலந்து விட்டுக்கோங்க அந்த சூட்டிலேயே வதங்கி வந்தா மட்டும் போதும் இப்ப இது நல்லா ஆறுனதுக்கப்புறமா மிக்ஸி ஜார்ல சேர்த்துட்டு தேவையான அளவுக்கு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நல்லா நைசா அரைச்சு எடுக்கவும்.
இதை தாளிக்க ஒரு பேன்ல ஒரு டீஸ்பூன் எண்ணெய், ½ டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு , கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில சேர்க்கனும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“