கொத்தமல்லி, இஞ்சி, தேன்... விறைப்புத்தன்மையை அதிகரிக்க இந்த ஜூஸ்: டாக்டர் டிப்ஸ்
ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் சில எளிமையான டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே நம்மால் பின்பற்ற முடியும்.
சில ஆண்கள் தங்களின் உடல் ரீதியான பிரச்சனைகளை நண்பர்களிடம் கூட சொல்ல தயங்குவார்கள். அதில் முக முக்கியமானது விறைப்புத் தன்மை பிரச்சனை. அந்த வகையில் விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
ஆண்களின் விறைப்புத் தன்மையை அதிகரிக்க கொத்தமல்லி பயன்படுவதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொத்தமல்லியை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
கொத்தமல்லியை தினமும் துவையலாக சாப்பிடலாம். இதேபோல், கொத்தமல்லியை ஜூஸ் எடுத்தும் குடிக்கலாம். அதன்படி, கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்கலாம். இதில் நைட்ரஸ் ஆக்ஸைடு அதிகமாக இருக்கிறது. அதனால், விறைப்புத் தன்மையை அதிகரிக்க இது பயன்படுகிறது என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால், வேறு எந்த விதமான ஒவ்வாமைகள் மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
Advertisment
Advertisement
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.