விறைப்பு குறைபாடு? வீட்டில் இருக்கும் இந்தக் கீரை போதும்; துவையல், சட்னி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா
கொத்தமல்லி கீரையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விறைப்புத் தன்மை குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மருத்துவ குணம் குறித்து அவர் விளக்கியுள்ளார்.
கொத்தமல்லி கீரையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விறைப்புத் தன்மை குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மருத்துவ குணம் குறித்து அவர் விளக்கியுள்ளார்.
பெரும்பாலும் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நண்பர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்வோம். ஆனால், நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் சில பிரச்சனைகள் இருப்பதாக ஆண்கள் கருதுகின்றனர். அவற்றில் முக்கியமாக விறைப்புத் தன்மை குறைபாடு இருக்கிறது.
Advertisment
இத்தகைய பிரச்சனையை வேறு யாரிடம் கூறினாலும் அவர்கள் எவ்வாறும் எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் நிறைய ஆண்களிடம் இருக்கும். இதனால், மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெறுவதற்கு கூட சிலர் தயாராக இல்லை.
எனவே, இது போன்ற பிரச்சனைகளை உணவு முறை மாற்றங்கள் மூலமாக சரி செய்து கொள்ளலாம் என்று கருதுபவர்கள் ஏராளம். அதனடிப்படையில், இதற்கு பயன்படக் கூடிய முக்கியமான உணவு குறித்து மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.
விறைப்புத் தன்மை குறைபாடு இருக்க கூடிய ஆண்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை சீரமைத்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதற்காக நைட்ரஸ் ஆக்ஸைட் இருக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
இது தவிர நம் வீட்டில் சாதாரணமாக எப்போதுமே இருக்கக் கூடிய கொத்தமல்லி கீரையில் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரி செய்யக் கூடிய ஆற்றல் இருப்பதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். சித்தர் பாடல்களில் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுவதாக அவர் வலியுறுத்துகிறார்.
எனவே, கொத்தமல்லி கீரையை எளிமையான முறையில் துவையலாக அல்லது ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது அதன் சத்துகள் நமக்கு கிடைக்கும். இதனை ஜூஸாக தயாரிக்க வேண்டுமானால் கொத்தமல்லி இலைகளுடன் இஞ்சி, தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதில் நைட்ரஸ் ஆக்ஸைட் இருப்பதால் விறைப்பு தன்மை குறைபாட்டை இது சரியாக்கும்.
எனினும், இந்தப் பிரச்சனை மிகத் தீவிரமாக இருந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிக்கல்களை தவிர்க்க உதவும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.