தனியா அல்லது கொத்தமல்லி என்று அழைக்கப்படும் இந்த அற்புத மூலிகை பொருள் நம்முடைய அன்றாட உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் எந்தவொரு வீட்டு சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நிச்சயமாக கூறலாம்.
அந்த அளவிற்கு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ள இந்த கொத்தமல்லி ஒவ்வொரு உணவுக்கு சுவை கூட்டும். தவிர, இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எடை இழப்பு
கொத்தமல்லியில் மிகப்பெரிய செரிமான பண்புகள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் இவை நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உடலை நச்சுத்தன்மை இல்லாமல் இருக்க உதவுகிறது.
ஆரோக்கியமான முடிவு
கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதாக அறியப்படுகிறது. இவை அனைத்தும் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொத்தமல்லி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது. மேலும், இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன. மற்றும் முகப்பரு, நிறமி மற்றும் தழும்புகளை குறைக்கிறது
கொத்தமல்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சரியான ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்.
கொத்தமல்லி வடிநீர் தயார் செய்வது எப்படி?
1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
பிறகு அவற்றை நன்றாக சுண்டக் கொதிக்க வைத்து பாதியாக குறைக்கவும்.
இதன்பின்னர், அவற்றை நீங்கள் பருகி மகிழவும்.
இந்த அற்புத பானத்தை நீங்கள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் வரை பருகலாம்.
உங்கள் சிறுநீரகம் தொடர்பான கடுமையான மருத்துவப் பிரச்சனைகள் இருந்தால், இந்த பானத்தை பருகும் முன், உங்கள் சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்கவும். சூடு அதிகம் இருந்தால் இதுவும் உடலுக்கு சூப்பர் குளிர்ச்சி தரும்.
5 ஆரோக்கிய நன்மைகள்:
1. கீல்வாத வலியைக் குறைக்க உதவுகிறது.
2. உடலில் நீர் தேங்க உதவுகிறது.
3. சிறுநீரகத்தில் உள்ள நச்சை நீக்க உதவுகிறது.
4. இது உடலுக்கு சூப்பர் குளிர்ச்சி மற்றும் வெப்பத்தை வெல்ல உதவுகிறது.
5. முகம் வீங்குவதைத் தடுக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“