சோள போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
சோளம் – 2 கப்
உளுந்தம்பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சோளத்தை தனியாக ஆவியில் வேக வைத்து ஆறவிடவும்.
பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, தேங்காய்த் துருவலுடன் கலந்து அரைத்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து உளுந்த மாவில் தடவி எடுக்கவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு பொரிக்கவும். அவ்வளவுதான் சுவையான சோள போண்டா ரெடி. தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“