மக்காச் சோளம், வாழைக்காய் கொண்டு சுவையான கட்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மக்காச்சோளம் – 200 கிராம்
வாழைக்காய் – 200 கிராம்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
ஓட்ஸ் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – ½ ஸ்பூன்
ரஸ்க் தூள் – 1 கப்
எண்ணெய் – 200 கிராம்
செய்முறை
மக்காச் சோள முத்துகளை உதிர்த்து அத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்பு அதில் ஓட்ஸை பொடித்து சேர்க்கவும். அத்துடன் வாழைக் காயை இரண்டாக வெட்டி வேகவைத்து தோல் உரித்து துருவி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசையவும். இப்போது வட்ட வடிவில் கட்லெட் செய்ய தேவையான வடிவில் தட்டி எடுக்கவும்.
இப்போது ரஸ்க் தூள் அல்லது பிரெட் தூள்களில் கட்லெட் பிரட்டி எடுத்து வைக்கவும். அடுத்து கடாய்யில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரெட்டில் பிரட்டி வைத்துள்ள கட்லெட்டை எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான கட்லெட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“