scorecardresearch

நிச்சயம் இந்த லட்டு கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.. புது ரெசிபி: ஆரோக்கியமும் இருக்கு!

மக்காச்சோள லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

நிச்சயம் இந்த லட்டு கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.. புது ரெசிபி: ஆரோக்கியமும் இருக்கு!

மக்காச்சோளம் எல்லோருக்கும் தெரியும். அதில் பல்வேறு வகை ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவை நாம் எடுத்துக்கொள்ளும் போது அவை நமக்கும் கிடைக்கிறது. மக்காச்சோளம் வேக வைத்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் அதில் லட்டு செய்து சாப்பிட்டுள்ளீர்களா. இங்கு மக்காச்சோளம் லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பைன் மக்காச்சோள மாவு – 1கப்
கோதுமை மாவு – அரை கப்
நாட்டுச்சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய் – 4
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 10
பால் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில் மக்காச்சோள மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். (குறிப்பு: மக்காச்சோள மாவில் பைன் என்று குறிப்பிட்டிருக்கும் மாவை பயன்படுத்துங்கள்). அடுத்தது அரை கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்பிற்கு முக்கால் கப் நாட்டுச்சர்க்கரையுடன் 4 ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு பவுடர் போல் அரைத்து எடுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன் 10 முந்திரி பருப்பு உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 பாதாம் பருப்பையும் சின்னதாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் வறுப்பட்டவுடன் எடுத்து வைத்த மக்காச்சோளம் மாவை இதில் சேர்த்து விடுங்கள்.

மக்காச்சோள மாவு லேசாக வறுபட்டதும் கோதுமை மாவை சேர்த்து இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும். பென்னிறமாக வரும் சமயத்தில் அரைத்து வைத்து நாட்டு சர்க்கரை பவுடரை சேர்த்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் வரை நன்றாக கலந்து விடுங்கள். இந்த சமயத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

அனைத்தும் நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி விடுங்கள். இப்பொழுது வறுத்த மாவு உதிரியாக இருக்கும் அதில் லட்டு பிடிக்க வராது. அதனால் பால் காய்ச்சி அதில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் மட்டும் எடுத்து இதில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். பாலை சூடாக ஊற்றும் போது மாவு பிசைவதற்கு ஏற்ற பதத்தில் வந்துவிடும்.

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். சுவை, ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள லட்டு தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் ஜில்லென சாப்பிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Corn laddu recipe making in tamil