ஸ்வீட் கார்ன் வைத்து சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம். ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் ஸ்வீட் கார்ன் வைத்து பக்கோடா செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ஸ்வீட் சோளம் - 1 வெங்காயம் - 2 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 3 நறுக்கியது கறிவேப்பிலை நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்பு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவுதான் கார்ன் பக்கோடா ரெடியாகிவிடும்.