கை, கால்கள் எப்பவும் சில்லுனு இருக்கா? உஷார்... இந்த நோய்க்கான அறிகுறி; கொத்தமல்லி இப்படி எடுங்க: டாக்டர் உஷா நந்தினி

தைராய்டு இருக்கிறதா? அப்போ கொத்தமல்லியை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.

தைராய்டு இருக்கிறதா? அப்போ கொத்தமல்லியை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
தைராய்டு குணமாக்க

தைராய்டு குணப்படுத்த கொத்தமல்லி

இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. 

Advertisment

இந்த தைராய்டு பிரச்சனையை வெறும் மாத்திரை மட்டும் போதாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று மருத்துவர் உஷா நந்தினி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

தைராய்டு பிரச்சனை இன்றவில் அதிக பேருக்கு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஆகும். நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம் மற்றும் ஜீன் சம்பந்தமான குறைபாடுகள் போன்றவை தைராய்டு வருவதற்கு காரணமாக இருக்கிறது.

அறிகுறிகள்: அதிக தூக்கம், மறதி, டென்ஷன், எரிச்சல், மலசிக்கல், உடல் எடை குறையும் அல்லது அதிகரிக்கும், சோம்பேறியாக இருத்தல், முடி உதிர்தல், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பது மற்றும் பதற்ற நிலையில் காணப்படுவது ஆகியவை முக்கிய காரணமாகும்.

Advertisment
Advertisements

தைராய்டு சுரப்பிகளின் சீராக இயக்கத்திற்கு கொத்தமல்லி விதை தண்ணீரானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். 

தைராய்டு உள்ளவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் | Dr M.S Usha Nandhini

தைராய்டை குணமாக்கும் கொத்தமல்லி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். 

அடுப்பை சிம்மில் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். பின்னர் இதனை வடிகட்டி காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவும். ஒரு நாளில் குறைந்தது 2 முறையாவது இதனை குடிக்கலாம். 

இந்த கொத்தமல்லி டீ தைராய்டை சமநிலைப்படுத்தும். தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்த உதவும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம்.ஆப்பிள்கள், பேரிக்காய், பிளம்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பழங்கள் அதிக பெக்டின் உள்ளடக்கம் இருப்பதால் தைராய்டு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கொட்டைகள் மற்றும் விதைகள், தைராய்டு செயல்பாட்டிற்கு ஒரு அத்தியாவசியனதாகும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Coriander seeds and its health benefits Healing foods for thyroid

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: