சர்க்கரை நோய் உள்ளவர்களால் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதுடன் மட்டுமல்லாமல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி டீ குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
Advertisment
சர்க்கரை நோய் வந்து விட்டாலே வாழ்க்கை முழுவதும் மாத்திரை மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் உணவு கட்டுப்பாடு இருக்காது. அப்படி இருப்பவர்கள் தினமும் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக இந்த டீயை குடிக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.
முதலில் கொத்தமல்லி டீ எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கொத்தமல்லி -100 கிராம்
மிளகு, சீரகம், ஓமம் - 20 கிராம்
இந்துப்பு
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் வெயிலில் காயவைத்து வறுத்து பொடி செய்து வைக்கவும். இதனை ஒரு டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம். தினமும் குடிக்கும் டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இந்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு குடிக்கலாம். இவற்றோடு சேர்த்து உடற்பயிற்சியும் அவசியம்.
கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும். இது இன்சுலின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.