கொத்தமல்லி சட்னியை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி, அஜீரணம், வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற வயிற்று அசௌகரியங்களையும் போக்கக்கூடும். இவ்வளவு நன்மைகள் கொண்ட கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்று வீரன் வீடு யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலைகள்
எண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
புளி
தேங்காய்
உப்பு
செய்முறை:
கொத்தமல்லி இலைகளை நன்றாக கழுவவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கழுவிய கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் புளி சேர்க்கவும். தேங்காய் துண்டுகளை சேர்க்கவும். அவ்வளவு தான் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சியில் போட்டு, மென்மையான சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
விரும்பினால், எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சேர்க்கலாம். இந்த மல்லி சட்னி சுவையாக இருப்பதுடன், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் இது வயிற்று உபாதைகளுக்கு உதவும்.
வாரத்தில் இரண்டு மூன்று முறை இந்த சட்னி சாப்பிடலாம். சுடுசாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.