இனி கடைக்கு சென்று இலவசமாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை நல்ல மணமாகவும் சுவையாகவும் வளர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
வீட்டில் இருக்கும் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லியை வைத்தே கொத்தமல்லி தழைகளை வளர்க்க முடியும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நாட்டு கொத்தமல்லியை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
முழு கொத்தமல்லியை ஊன்றி வைத்தால் கொத்தமல்லி செடி வளர தாமதமாகும். அதனால் ஒரு துணி பையில் இந்த கொத்தமல்லி விதைகளை போட்டு சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து பாதியாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
ரொம்பவும் அழுத்தாமல் பாதியாக உடையும் அளவிற்கு உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கொத்தமல்லியை அப்படியே மண்ணில் போட்டு தூவி விடாமல் ஒரு இரவு முழுக்க கொத்தமல்லியை நீரில் ஊற வைக்க வேண்டும்.
இந்த மாதிரி உடைத்து ஊறவைத்து மண்ணில் விதைப்பதன் மூலம் கொத்தமல்லி தழைகள் விரைவில் முளைத்து வளர ஆரம்பித்து விடும்.இதனை வளர்க்க மண்புழு உரம் கலந்த மண்ணை செடி வளர்க்கும் தொட்டியில் எடுத்து கொள்ள வேண்டும்.
தொட்டியில் உள்ள மண்ணில் விரல் வைத்து பாத்தி பிரித்து கொத்தமல்லியை தூவி வ்விட வேண்டும். பின்னர் மேலோட்டமாக மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இதற்கு தண்ணீர் தெளித்து எடுத்தாலே போதும் சரியாக 10 - 12 நாட்கள் கழித்து துளிர் விட ஆரம்பித்து விடும்.
சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய கொத்தமல்லி இருந்தாலும் செழிப்பாக வளரும் இதற்கு அவ்வப்போது தண்ணீர் தெளித்து எப்போதுமே மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
வீட்டில் இருக்கும் நாட்டு கொத்தமல்லியை பயன்படுத்தும் போது கொத்தமல்லி உயரமாக வளராது. ஆனால் நல்ல மணமாக இருக்கும். இந்த கொத்தமல்லி இலைகளில் பூ வர ஆரம்பித்து விட்டால் அறுவடைக்கு தயாராக உள்ளது என்று அர்த்தம் அதற்கு முன்னதாகவே தழைகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகமான வெயிலிலும் இருக்க கூடாது கொஞ்சம் நிழல் பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும். இதை தரையிலும் வளர்க்கலாம். நல்ல பரவலாக அதிக அளவில் வளர்ந்து வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“