இளமையிலேயே இதய சம்பந்தமான பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் அதை எல்லாம் தவிர்க்க டாக்டர் ஜெயரூபா ஒரு ஜூஸ் பற்றி ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இதை தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய ஒரு ஜூஸ் தான் கொத்தமல்லி ஜூஸ். இதனை எப்படி, எப்போ எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவது பற்றி பார்ப்போம்.
Advertisment
கொத்தமல்லி ஜூஸ் பயன்கள்:
1. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்
2. இதய தசைகளை பலப்படுத்தும்
Advertisment
Advertisements
3. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
4. இரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுக்கும்
5. மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் – தோலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி புதினா இஞ்சு எலுமிச்சை சாறு
செய்முறை
ஒரு கைப்பிடி கொத்தமல்லி எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். 10 புதினா இலைகள் – தேய்த்து கழுவி சேர்க்கவும். சின்ன துண்டு இஞ்சி தோல் உரித்து சேர்க்கவும். பின்னர் அரை எலுமிச்சைச்சாறு எடுத்து பிழிந்து விடவும். இவை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.
கொத்தமல்லி ஜுஸ் குடிக்க முடியாதவர்கள் கொத்தமல்லி விதை டீ குடிக்கலாம்.
செய்முறை: 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை எழுந்தவுடன் வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.
இதனால் நரம்பு பலவீனம், தைராய்டு பிரச்சனை, மூட்டு வலி போன்றவற்றை குறைக்க, கொத்தமல்லி விதைகளை இரவு ஊறவைத்து காலையில் டீயாக குடிக்கலாம். இது இரத்த சுத்திகரணத்துக்கும், உடலின் மினரல் சேகரிப்புக்கும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.