திடீரென வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால், என்ன சமைப்பது என்கிற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் இனி அதை பற்றிய கவலை வேண்டாம். சட்டென்று ஒரு டிஷ் அதுவும் ஈஸியா ஒரு வாரம் வரைக்கும் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தமல்லி துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கொத்தமல்லி
பச்சை மிளகாய்
வெங்காயம்
துருவிய தேங்காய்
புளி
உப்பு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து, அரைத்த தேங்காயைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
இறுதியாகக் கொத்தமல்லி சேர்த்து, இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி அதிகம் வதக்க வேண்டாம் பச்சை வாசம் நீங்கினால் போதும்.
இதனை சிறிது நேரம் ஆற வைத்து உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்சியில் அரைத்தால் போதும் சுவையான கொத்தமல்லி துவையல் தயார். தேவைப்பட்டால், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துத் துவையலோடு சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“