தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. இந்த தோசைகளை மொறு மொறுப்பாக தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது.
Advertisment
அந்த வகையில், ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்றும் இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரேஷன் அரிசி - 4 கப் கடை இட்லி அரிசி - 1 கப் ரேஷன் பச்சரிசி - 1/2 கப் முழு உளுந்து - 1 கப் வெந்தயம் - 1 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் ரேஷன் அரிசி, கடை இட்லி அரிசி, ரேஷன் பச்சரிசி ஆகியற்றை சேர்த்து 4 முறை நன்கு அலசிக்கொள்ளவும். பிறகு அவற்றில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
இதேபோல், உளுந்தையும் 2 முறை நன்கு கழுவி அவற்றை ஊற வைத்துக் கொள்ளவும். இவற்றை குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இதன்பிறகு, கிரைண்டரில் முதலில் உளுந்தை போட்டு அரைத்து எடுக்கவும். பின்னர் அரிசியை போட்டு அரைத்து எடுக்கவும். இவற்றை அரைக்கும் போது வெந்தயம் சேர்த்து அரைக்கவும்.
அரைத்து எடுத்த மாவை உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு, மொறு மொறு தோசைகளை சுட்டு அசத்தலாம்.