மொறு மொறு தோசை கேரண்டி; மாவு அரைக்கும் போது இந்த 2 பொருள் சேருங்க: செஃப் ராகவன் ரெசிபி
, மொறு மொறுப்பாக தோசை தயார் முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம். இந்த டிப்ஸ்களை செஃப் ராகவன் தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. இந்த தோசைகளை மொறு மொறுப்பாக தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது.
Advertisment
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், மொறு மொறுப்பாக தோசை தயார் முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம். இந்த டிப்ஸ்களை செஃப் ராகவன் தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதனை நாம் இங்குப் பார்க்கலாம். அந்த வகையில், மிகவும் சுலபமாக மொறு மொறு தோசை தயார் செய்ய எளிய செய்முறை இங்கு நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 200 கிராம் பச்சரிசி - 200 கிராம் உளுந்து - 100 கிராம் கடலை பருப்பு - 15 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி
Advertisment
Advertisements
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து, கடலை பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். பிறகு, அவற்றை தண்ணீர் விட்டு நன்கு கழுவிக் கொள்ளவும். இதன்பிறகு, இவற்றை 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்து ஊற வைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், அவற்றில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு, வழக்கம் போல் கிரைண்டரில் போட்டு, தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை அரைத்தவுடன் அவற்றில் உப்பு சேர்த்து கையால் கலந்து விடவும். இந்த மாவு புளிப்பு ஏறி பொங்கி வர அப்படியே விட்டு விடவும்.