பச்சரிசியில் மொறு மொறு வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான அளவு
பச்சரிசி மாவு - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கப் நீரைக் கொதிக்கவிட்டு அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.
இப்போது இந்த மாவு பதத்தில் இருக்க கூடிய கலவையை எடுத்து வட்டமாக வடை போடுவதற்கு ஏற்ப தட்டி வைக்கவும். அடுத்து கடாய்யில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் சூப்பரான மொறு மொறு அரிசி வடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“