Advertisment

மொறு மொறு ரவா தோசை ரகசியம்: 'மாவு ஊற்றும் முன்பு கல்லில் எண்ணெய் தேய்க்காதீங்க'

ரவா தோசை சரியாக வரவில்லையா செஃப் தீனா சொல்லும் டிப்ஸ் இங்கே

author-image
WebDesk
New Update
rava do

மொறு மொறுப்பாக ரவா தோசை செய்ய செஃப் தீனா சொல்லும் டிப்ஸ் மற்றும் ரெசிபியை இங்கு பார்க்கலாம். 

Advertisment

ரவை - 500 கிராம்
அரிசி மாவு - 400 கிராம்
மைதா- 250 கிராம்
சீரகம் - ¼ ஸ்பூன்
பச்சை மிளகாய்- 1
இஞ்சி - ¼ ஸ்பூன் 
மிளகு - ¼ ஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு 
கொத்தமல்லி  - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - ¼  ஸ்பூன்
எள் விதை  - ¼ ஸ்பூன் 
நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரம் எடுத்து ரவையை சேர்க்கவும். வறுக்க தேவையில்லை அப்படியே சேர்க்கலாம். அடுத்து அதில் அரிசி மாவு, மிளகை இடித்து சேர்த்து, கொத்தமல்லி, சீரகம், எள், மைதா மாவு, சர்க்கரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். கட்டாயம் இஞ்சி சேர்க்க வேண்டும். அதுதான் சுவை தரும். இதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். அதன் பின் உப்பு சேர்க்கவும்.

இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து எண்ணெய் ஏதும் ஊற்றாமல் மாவும் ஊற்றாமல் வெங்காயம் வைத்து தேய்க்க வேண்டும். அதன் பின் டம்ளர் எடுத்து மாவு ஊற்ற வேண்டும். கேப் இருக்கும் அதிலும் மாவு  ஊற்றி பின் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால்  மொறு மொறு ரவா தோசை ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment