கிரிஸ்பியான மெதுவடை செய்வதற்கான முறையை செஃப் தாமு கூறுகிறார். கிரிஸ்பி மெதுவடையை இப்படி செய்து பாருங்கள்.
கிரிஸ்பியான உளுந்து வடை செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். உளுந்து மாவு அரைக்கும்போது தண்ணீ ஊற்றாமல் அரைத்தால் கிரிஸ்பியான மெதுவடை கிடைக்கும் என்கிறார்.
உளுந்துவடை செய்யத் தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு 1 கப்
வெங்காயம் ஒரு கை
இஞ்சி,
பச்சை மிளகாய் 3
மிளகு ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு
கடலை எண்ணெய் வடை பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
இந்த உளுத்தம் பருப்பை குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் உற்றாமல் அப்படியே அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
உளுத்தம் பருப்பு அரைத்த மாவில், உப்பு தேவையான அளவு தூவிக்கொள்ளுங்கள். வெங்காயம் தேவையான தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை மிளாய் 3 நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, மிளகு, ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக பிசைந்துகொள்ளுங்கள்.
இப்போது, ஸ்டவ்வில் ஒரு வானலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். எண்னெய் காய்ந்த பிறகு, வடை செய்வதற்கு பிசைந்து தயார் செய்து வைத்துள்ள உளுந்து மாவை நீங்கள் வழக்கம் போல தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுங்கள் கிரிஸ்பியான மெதுவடை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“