வெள்ளரி பாயாசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
பால் – 250 மில்லி
சர்க்கரை – தேவையானஅளவு
ரிசி மாவு – 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
முந்திரி – தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளரி பாயாசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“