வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடை குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை இது பயன்படுவதாக டாக்டர் அருண்குமார் கூறுகிறார். மேலும் இது குறித்து அவர் டாக்டர் அருண்குமார் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாக டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மேலும் வெள்ளரிக்காய் ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும். இது உட்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.
வெள்ளரிக்காயில் கணிசமான அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். 100 கிராம் வெள்ளரிக்காயில் கலோரி, மாவுச்சத்து, நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் கே,சி ஆகிய சத்துக்கள் உள்ளன.
How to eat cucumber to get maximum health benefits? | Dr. Arunkumar
நீர்ச்சத்து நிறைய உள்ளதால் வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். மேலும் வெள்ளரிக்காயை தோலோடு தான் சாப்பிட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.