வெள்ளரிக்காய் உடல் நலத்திற்கு சிறந்தது. குறைந்த விலையில் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு காய். இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் அப்படியே சாப்பிடலாம். பொறியல் செய்தும் கூட சாப்பிடலாம். அந்த வரிசையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 3
பாசிப்பருப்பு – 1 கப்
தேங்காய் துருவல் – 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். பாசிப்பருப்பை குக்கரில் போட்டு வேக விடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும். அடுத்து
அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
அடுத்தாக மற்றொரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். கடையில் கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த தாளித்த பொருட்களை முன்னர் வேக வைத்து எடுத்த வெள்ளரி கலவையில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/