வெள்ளரிக்காய் மிகவும் முக்கியமான சத்துக்களை கொண்டது. குறிப்பாக தண்ணீர் சத்து அதிகம். இதில் நார்சத்து, மினரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
வெள்ளரிக்காயில் 95 % தண்ணீரால் ஆனது என்பதால், இது உடலுக்கு தேவையான நீர் சத்தை கொடுக்கும் மேலும் வரட்சியிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் இதை நாம் அதிகமாகவே சாப்பிடலாம். இப்படியாக வெள்ளரிக்காயின் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் வெள்ளரி ஜூஸ் எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் உஷா நந்தினி அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெள்ளரிக்காயில் மிகவும் குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வெள்ளரிக்காய் ஜூஸுடன் இஞ்சி சேர்க்கும் போது அது குடல் சுத்தத்தை மேம்படுத்துகிறது. அப்படிப்பட்ட வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்
இஞ்சி
உப்பு
மிளகுத்தூள்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் நறுக்கி போட்டு அதனுடன் இஞ்சி ஒரு துண்டு சேர்த்து மைய அரைக்கவும். விருப்பம் உள்ளவர்கள் வடிகட்டலாம். இல்லையென்றால் அப்படியே எடுத்து அதில் உப்பு போடவும். சளி பிடிக்கும் என்பவர்கள் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை தினமும் குடித்து வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதில் இருக்க கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும்.
Gut Health Drinks: A Life-Changing Recipe!
அதேபோல தான் ஆப்பிள் ஜூஸும் குடலை சுத்தம் செய்ய உதவும். வாரம் இரண்டு முறை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.