கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க். அப்படியாக பிரஷர் குக்கரில் சாக்லேட் கப் கேக் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய், காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு கலந்து வைத்த மாவில் சர்க்கரை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும். கப் கேக் அச்சில் மாவை ஊற்றி கேக் டின்னில் வைத்து டின்னை குக்கரில் வைத்து, குக்கரை ரப்பர் மற்றும் விசில் இன்றி மூடவும்.
45 நிமிடம் குறைந்த தீயில் பேக் செய்யவும். பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், காய்ச்சி ஆறவைத்த பால், கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்.
கலந்த கிரீமை பைப்பிங் பையில் போட்டு வைக்கவும். கப் கேக் நன்கு ஆறியதும் அச்சில் இருந்து எடுத்து தட்டில் வைத்து, அதின் மீது கிரீமை வைத்து அலங்கரிக்கவும். கடைசியாக துருவிய சாக்லேட்டை தூவி பரிமாறவும்.