வட இந்தியாவில் மழை மற்றும் குளிர்காலங்களில் செய்யக்கூடிய ஒரு ஃபேமஸான டிஷ் தான் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் செய்யப் போகிறோம். மிகவும் காரமாக சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிடக்கூடிய ஒரு டிஸ்தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர்
உப்பு
பச்சை மிளகாய்
தயிர்
கடுகு
சீரகம்
எண்ணெய்
காய்ந்த மிளகாய்
சோம்பு
கொத்தமல்லி
மஞ்சள் தூள்
மாங்காய் பொடி
பிளாக் சால்ட்
பூண்டு
மிளகாய்த்தூள்
செய்முறை
ஒரு கடாயில் தண்ணீர் போட்டு அதில் சிறிது உப்பு போட்டு கரைத்து கொதிக்க விடவும். பச்சை மிளகாய் எடுத்து கீறி வைக்கவும் அறுக்கக்கூடாது நடுவில் கீரி வைக்கவும்.
பின்னர் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் அந்த தண்ணீரில் கலந்து விடவும். ஐந்து முதல் ஏழு மணி நேரம் அந்த தண்ணீரிலேயே பச்சை மிளகாய் நன்கு வேக வேண்டும்.
பச்சை மிளகாய் உப்பு தண்ணீரில் வேக வைக்கும் போது இதை உடனே செய்து நாளைக்கு சாப்பிடலாம். அதனால் கட்டாயம் பச்சை மிளகாயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். காரம் தண்ணீரில் இறங்கிவிடும் போது அந்த பச்சை மிளகாய் சுவை மட்டும் இருக்கும்.
தண்ணீர் நன்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். நன்கு சுண்டி வெறும் மிளகாய் மட்டும் கடாயில் இருக்கும் போது அதை இறக்கி ஆறவிடவும். பின்னர் வேறொரு கடாயில் கடுகு போட்டு வறுக்கவும். அதேபோல சீரகம், சோம்பு, கொத்தமல்லி ஆகியவற்றையும் வறுக்க வேண்டும்.
பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பிளாக் சால்ட் சேர்த்து அரைக்கவும். அரைத்த பவுடரை வேகவைத்த மிளகாயில் போட்டு அதில் சிறிது மஞ்சள் தூள், மாங்காய் பொடி போட்டு கலந்து வைக்கவும்.
Thayir Milagai | Dahi mirchi | milagai oorugai | Chef Venkatesh Bhat
ஒரு கடாயில் நல்லெண்ணெய் போட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை சிவந்து வந்ததும் அதில் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு பின்னர் இதை வேகவைத்த மிளகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். நன்கு கலந்ததும் அதில் தயிர் சேர்த்து ஊற வைக்கவும். இதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து ஒரு இரண்டு நாள் கழித்து சாப்பிடலாம்.
அல்சர், வயிற்றுப்புண், எரிச்சல், காரம் சேராதவர்கள் இதை தவிர்த்து விடலாம். தொப்பை உள்ளவர்கள் பச்சை மிளகாய் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையை குறைக்கும் என்றும் வெங்கடேஸ் பட் கூறினார்.
இந்த தகவல்கள் அனைத்தும் வெங்கடேஷ் பட் இதயம் தொட்ட சமையல் யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.