காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து சுவை, ஆரோக்கியம் நிறைந்த தயிர் இட்லி செய்து குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி - தேவையான அளவு (குறைந்தது 8 எடுத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2
தயிர் - 1 கப்
தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 துண்டு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி, இஞ்சி, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய்யை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த விழுதை தயிரில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும். இட்லிகளைச் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி தயிர் சேர்த்து வைத்துள்ள கப்பில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி விடவும். இறுதியாக காராபூந்தியை அதன் மேல் தூவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தயிரில் இட்லி ரெம்பவும் ஊறினால் இட்லி குலைந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தயிரை ஊற்றி இட்லியை வேக வைப்பதும் நல்லது. மேலும் அலங்கரிக்க மற்றும் கூடுதல் சுவையாக இருக்க அன்னாசிப் பழம். திராட்சையை பூந்தி உடன் கடைசியா தூவி விட உணவு பார்க்க கலர்ஃபுல்லா இருக்கும். அவ்வளவு தான் டேஸ்டி, ஆரோக்கியம் நிறைந்த ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“