சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அப்படியான ஒரு புதுவிதமான தயிர் மசாலா கறி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பூண்டு காஷ்மீரி மிளகாய் தூள் தயிர் எண்ணெய் கடுகு சீரகம் பெருங்காய தூள் கறிவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் தனியா தூள் சீரக தூள் உப்பு கொத்தமல்லி இலை
செய்முறை
சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக இடித்து கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து வைத்து கொள்ளவும். பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் வறுக்கவும்.
பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பூண்டு மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடைந்த தயிரை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். சுவையான தயிர் மசாலா கறி தயார்.