ஒரு கப் சாதத்திற்கு 2 கப் பால்... வெண்ணை மாதிரி டேஸ்ட்டி தயிர் சாதம்; செஃப் தாமு ஸ்டைலில் செய்து பாருங்க!

செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் வழங்கியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுத்தால், வேண்டாம் என மறுப்பு சொன்னவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிடுவார்கள்

செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் வழங்கியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுத்தால், வேண்டாம் என மறுப்பு சொன்னவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிடுவார்கள்

author-image
WebDesk
New Update
Curd Rice Thayir Saadham  recipe by Chef Damu in tamil

மிகவும் டேஸ்டியான மற்றும் சூப்பரான தயிர் சாதம் செஃப் தாமு ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

தயிர் சாதம், பெரும்பாலோனோருக்குப் பிடித்த உணவாகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், வழக்கமாக தயிர் சாதம் என்றால் பலரும் முகம் சுளித்து விடுவார்கள். இப்படி முகம் சுளிக்கும் மக்களின் முகத்தில் புன்னகையை தவழ விட சமையல் கலையில் வல்லுநரான செஃப் தாமு சிம்பிள் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். 

Advertisment

செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் வழங்கியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுத்தால், வேண்டாம் என மறுப்பு சொன்னவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த வகையில், மிகவும் டேஸ்டியான மற்றும் சூப்பரான தயிர் சாதம் செஃப் தாமு ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சாதம் - 1 கப் (குழைய வேக வைத்து வடித்தது) 
தயிர்
பால் - 2 கப் 
கொத்தமல்லி தழை 
கருவேப்பிலை 
உப்பு 
இஞ்சி - சிறிய துண்டு 
பச்சை மிளகாய் - 1 
வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
முந்திரி

Advertisment
Advertisements

நீங்கள் செய்ய வேண்டியவை 

ஒரு காடாய் அல்லது பாத்திரம் எடுத்து அதில் முதலில் குழைய வேக வைத்து வடித்த சாதத்தை சேர்க்கவும். பிறகு, அவற்றுடன் சிறிதளவு பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 

இதன்பின்னர், அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும். ஒரு கரண்டியை எடுத்து சாதத்தை நன்கு கலந்து விடவும். பிறகு மீதமுள்ள சிறிதளவு பால் சேர்க்கவும். 

பின்னர் அடுப்பை அணைத்து விடவும். இதனிடையே, வலது கையை நன்றாக கழுவிக் கொள்ளவும். பிறகு சாதத்தை கையால் பிசைந்து கொள்ளவும். அவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசையவும். விருப்பமுள்ளவர்கள் பொடியாக நறுக்கிய கேரட், மாங்காய், மாதுளை சேர்க்கலாம். திராட்சை வேண்டும் என்றால், கடைசியாக சேர்க்கலாம். நன்கு பிசைந்த சாதத்துடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

 இதன்பின்னர் தாளிக்க, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயம் சேர்க்கவும். பிறகு, கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். அவற்றுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். விருப்பமுள்ளவர்கள் முந்திரி சேர்த்து தாளிப்பு தயார் செய்து கொள்ளலாம். 

இந்த தாளிப்பை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தயிர் சாதத்துடன் சேர்க்கவும். கடைசியாக தயிர் சேர்த்து சாதத்தை கலந்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான தயிர் சாதம் ரெடி.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: