/indian-express-tamil/media/media_files/2025/02/13/xOFqTbzrsuBwV9Pkr3TB.jpg)
நரை முடி குணமாக கருவேப்பிலை, சீரகம்
இன்றைய காலத்தில் இளநரை என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை தான். சிறுவயதில் இருந்தே இளநரை பிரச்சனை வந்துவிடுகிறது. என்ன செய்தாலும் எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் இளநரை பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என்று கூறுபவர்கள் டாக்டர் ஷர்மிளா கூறும் இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கள். இதுகுறித்து டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
சீரகம்
இஞ்சி
உப்பு
தயிர்
செய்முறை
டிப்ஸ் 1: இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து தினமும் காலையில் ஒரு வருடத்திற்கு குடித்து வர வேண்டும். காலை உணவுக்கு பிறகு இதனை தினமும் குடித்து வர வேண்டும்.
டிப்ஸ் 2: வெறும் கருவேப்பிலையை சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து நெல்லிக்காய் அளவிற்கு உருட்டி தினமும் காலையில் சாப்பிட்டு மோர் குடிக்கலாம்.இளநரை பிரச்சனையும் தீர்ந்து நல்ல அடர்த்தியான முடி மற்றும் இளநரையை குணப்படுத்தலாம்.
Best Remedy For HAIR PROBLEMS !! | Explained by Dr.Sharmika
இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் தான் பலன் கிடைக்கும். சிறிது நாட்கள் சாப்பிட்டு விட்டு விட கூடாது. அப்படி செய்தால் பலன் கிடைக்காது.
மேலும் கருவேப்பிலை எலும்பை உறுதியாக்கும், கண்பார்வையை தெளிவாக்கும், இரத்தம் சுத்தமாகும் இதுபோன்ற ஏராளமான நன்மைகளும் உண்டு.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.