60 வயதிலும் உங்க முடி கரு கருன்னு இருக்கணுமா? இந்த இலையில் செய்த மிட்டாய்; இப்படி சாப்பிட ட்ரை பண்ணுங்க!
இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க, உடல் எடையை குறைக்க, இரத்தத்தை சுத்திகரிக்க என இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சூப்பரான உணவு உள்ளது தெரியுமா?
இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க, உடல் எடையை குறைக்க, இரத்தத்தை சுத்திகரிக்க என இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சூப்பரான உணவு உள்ளது தெரியுமா?
உங்களுக்கு அதிக முடி உதிர்தல் இருக்கிறதா? சின்ன வயதிலேயே இளநரை வந்துவிட்டதா? 60 வயதிலும் கரு கருவென்று முடி இருக்க ஆசையா? இதற்கெல்லாம் ஹேர் சீரம், ஷாம்பூ, விதவிதமான எண்ணெய்கள், மருந்துகள் மட்டும் போதாதுங்க! ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க, உடல் எடையை குறைக்க, இரத்தத்தை சுத்திகரிக்க என இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சூப்பரான உணவு உள்ளது தெரியுமா? அது வேறொன்றுமில்லை.
Advertisment
கருவேப்பிலை தான்.
இது சாதாரணமாக கிடைப்பதாலோ என்னவோ, சாம்பார், ரசம் என எந்த உணவில் போட்டாலும் தூக்கி எறிந்துவிட்டுத்தான் சாப்பிடுகிறோம். நிறைய பெரியவர்களும் குழந்தைகளும் இப்படித்தான் செய்கிறார்கள். ஆனால், இனிமேல் தூக்கிப் போடாமல், இதில் இருக்கும் எல்லா சத்துக்களும் நமக்குக் கிடைக்கும் விதமாக கருவேப்பிலை மிட்டாய் செய்யலாம்.
Advertisment
Advertisements
தேவையானவை
7 கைப்பிடி அளவு ஃப்ரெஷ்ஷான கருவேப்பிலை இலைகள் (சுமார் ஒரு கைப்பிடி அளவு காய்ந்த பிறகு)
2 பட்டைத் தேங்காய் பத்தைகள் (துருவியது)
1 முழு ஜாதி பத்திரி
1 சிறிய துண்டு பட்டை
4 ஏலக்காய்
15 பாதாம் பருப்பு
15 பேரீச்சம் பழங்கள் (கொட்டை நீக்கியது)
4 டேபிள் ஸ்பூன் வெல்லப் பொடி
1 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை:
கருவேப்பிலை இலைகளை காம்புகளிலிருந்து தனித்தனியாகப் பிரித்து எடுக்கவும். தண்ணீரில் ஒருமுறை அலசி, ஃபேன் காற்றுக்குக் கீழே ஒரு மணி நேரம் நிழலில் காய வைக்கவும். காய்ந்த கருவேப்பிலை இலைகளை ஒரு ஃப்ரை பேனில் சேர்த்து, அடுப்பை ஸ்லோ ஃபிளேமில் வைக்கவும். 7 நிமிடங்கள் கிளறிக்கொண்டே வறுக்கவும்.
துருவிய கொப்பரை தேங்காய் மற்றும் ஜாதி பத்திரியை கருவேப்பிலையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும் 5 நிமிடங்கள் ஸ்லோ ஃபிளேமில் வறுக்கவும்.
சிறிய துண்டு பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் ஸ்லோ ஃபிளேமில் வறுக்கவும். கருவேப்பிலை மொறுமொறுப்பாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் மாற்றவும். அதே ஃப்ரை பேனில் பாதாம் பருப்பைச் சேர்த்து 5 நிமிடங்கள் ஸ்லோ ஃபிளேமில் வறுத்து, கருவேப்பிலையுடன் சேர்க்கவும்.
அதே ஃப்ரை பேனில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்களைச் சேர்த்து, 4 டேபிள் ஸ்பூன் வெல்லப் பொடியை சேர்க்கவும். 5 நிமிடங்கள் அல்லது பேரீச்சம் பழமும் வெல்லமும் சேர்ந்து வரும் வரை சமைக்கவும். அடுப்பை அணைத்து கீழே இறக்கவும்.
வறுத்த கருவேப்பிலை, தேங்காய், ஜாதி பத்திரி, பட்டை மற்றும் ஏலக்காய் கலவையை நன்றாக ஆறவிடவும். ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து ஈரமில்லாமல் பார்த்து, நல்லா ஃபைன் பவுடராக அரைக்கவும்.
அதே மிக்ஸி ஜாரில் பேரீச்சம் பழம் - வெல்லம் கலவையை சேர்த்து நல்லா பேஸ்ட்டாக அரைக்கவும். அரைத்த கருவேப்பிலை பொடியுடன் பேரீச்சம் பழ பேஸ்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகப் பிசைந்து விடவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த கலவையிலிருந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். தேவைப்பட்டால் பட்டர் ஷீட்டில் வைத்து சுருட்டிக் கொள்ளலாம்.
உருட்டிய மிட்டாய்களை கண்ணாடி அல்லது ஸ்டீல் கண்டெய்னரில் போட்டு சேமிக்கவும். இந்த மிட்டாய்களை மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை மிட்டாய் தயார்
அதே மாதிரி, இதை நீங்கள் சாப்பிட்ட உடனே முடி உதிர்வது குறையுமா, முடி வளருமா, இளநரை வந்து மாறிடுமா என்றெல்லாம் நீங்கள் நினைக்கக் கூடாது. இது முழுவதுமாக ஹெர்பல், ரிசல்ட் லேட்டாகத்தான் காமிக்கும், ஆனால் நிரந்தரமாக இருக்கும்.