ஷார்ப் பார்வை டூ முடி உதிர்வை தடுப்பது வரை... இந்த இலை வச்சு சாதம் சாப்பிட்டு பாருங்க!
வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்த கருவேப்பிலையின் நன்மைகளை முழுமையாகப் பெற உதவும் கறிவேப்பிலை சாதம், காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிட ஏற்றது.
வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்த கருவேப்பிலையின் நன்மைகளை முழுமையாகப் பெற உதவும் கறிவேப்பிலை சாதம், காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிட ஏற்றது.
ஷார்ப் பார்வை டூ முடி உதிர்வை தடுப்பது வரை... இந்த இலை வச்சு சாதம் சாப்பிட்டு பாருங்க!
ஆரோக்கியமான அதே சமயம் சுவையான உணவைத் தேடுபவர்களுக்கு, கருவேப்பிலை சாதம் அருமையான தேர்வு. வழக்கமான உணவுகளில் இருந்து மாறுபட்டு, எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கக் கூடிய இந்த உணவு, அதன் நறுமணத்தாலும், சுவையாலும் அனைவரையும் கவரும். வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்த கருவேப்பிலையின் நன்மைகளை முழுமையாகப் பெற உதவும் கறிவேப்பிலை சாதம், காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிட ஏற்றது.
Advertisment
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தேவையான அளவு
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2-3
புளி - சிறிதளவு
கருவேப்பிலை - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - தேவையான அளவு
முந்திரி பருப்பு (விரும்பினால்) - தேவையான அளவு
பெருங்காயப்பொடி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1-2 (காரத்திற்கு ஏற்ப)
அரைத்து வைத்த கருவேப்பிலை பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வடித்த சாதம் - தேவையான அளவு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், சிறிதளவு புளி மற்றும் சுத்தப்படுத்திய ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை வறுபட்டதும், அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும், இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, நைஸான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். வேர்க்கடலை மற்றும் தேவைப்பட்டால் கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். கருவேப்பிலை, சிறிதளவு பெருங்காயப்பொடி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இப்போது, அரைத்து வைத்த கருவேப்பிலை பொடி (3 டீஸ்பூன்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெயில் நன்கு கலக்கவும். கடைசியாக, வடித்து ஆற வைத்த சாதத்தைச் சேர்த்து, பொடியுடன் நன்கு கலக்கும்படி கிளறவும். சுவையான மற்றும் வாசமான கருவேப்பிலை சாதம் தயார்!