/indian-express-tamil/media/media_files/2025/04/13/tirrxXlQMyN4ZB79iY6a.jpg)
இன்றைய சூழலில் நிறைய பெண்களுக்கு பி.சி.ஓ.டி பிரச்சனை இருப்பதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு, முகத்தில் தேவையில்லாத இடங்களில் முடி வளர்வது, நிறைய நேரத்தில் களைப்பாக உணர்வது, மறதி மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பிரச்சனைகளை மனதளவிலும், உடலளவிலும் உருவாக்கும் பி.சி.ஓ.டி பிரச்சனைக்கு தீர்வு காண சில வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். சீரான உறக்கம், யோகா, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றலாம். இது தவிர கறிவேப்பிலை மோர் தயாரித்து அருந்தலாம் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
தேவையான பொருட்கள்:
1 கைப்பிடி கறிவேப்பிலை,
1 கப் மோர் மற்றும்
1 சிட்டிகை இந்துப்பு.
செய்முறை:
கறிவேப்பிலையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் மோர் மற்றும் இந்துப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த மோரை வடிகட்டாமல் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு குடித்தால் பி.சி.ஓ.டி பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.