கருவேப்பிலையில் , நார்சத்து இருக்கிறது. இது நமது ஜீரணிக்கும் நேரத்தை குறைப்பதால் , ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்தான பீட்டா கரோட்டீன் இருப்பதால், நோய்களிலிருந்து நம்மை காபாற்றுகிறது. மேலும் டைப் 2 சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
கருவேப்பிலை வைத்து நடத்தப்பட ஆய்வு ஒன்றில் இதில் சர்க்கரை அதிகரிக்காமல் இருக்கும் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
8 முதல் 9 கருவேப்பிலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பட்டை
இது டைப் 2 சர்க்கரை நோய்யை கட்டுபடுத்தவும். கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது இன்சுலினை தூண்டிவிடும் வேலையை செய்கிறது.
மேலும் இது தொடர்பாக நடந்த ஆய்வு ஒன்றில், சரியான அளவில் பட்டையை எடுத்துக்கொண்டவர்களுக்கு 18 முதல் 29 % ரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் குடிக்கும் பாலில் பட்டை பொடியை கலந்து குடிக்கலாம்.

மஞ்சள் தூள்
இதில் இருக்கும் குர்குமின் ரத்த சர்க்க்ரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இன்சுலினை நன்றாக செயல்பட வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகள், சர்க்கரை நோயால் ஏற்படும் சேதங்களை குணமாக்குகிறது.
இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் பாலில், மஞ்சள் போடி சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது.