உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
கண் கோளாறு: இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். நீண்ட நேரம் செல்போன், லேப்டாப் பார்ப்பவர்கள் அதிகம் கருவேப்பிலை எடுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். சர்க்கரைக்கு மருத்து சாப்பிடுபவர்கள் மருந்துடன் சேர்த்து கருவேப்பிலையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்: செரிமானத்திற்குக் கருவேப்பில்லை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் வயிறு உப்பசம், வயிற் எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கருவேப்பிலை சாப்பிடலாம். இதன் காரணமாக, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.
நோய்த் தொற்று: இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் 3 முதல் 4 கருவேப்பிலையை மென்றுத் தின்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
எடை குறைப்பு: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். கறிவேப்பிலை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.
இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோயில் இருந்து நம்மை காக்கும்.
புற்றுநோய்: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் உடலில் வீக்கம் ஏற்படாமல் இருக்கவும் உதவும். ஏற்கனவே மூட்டுகளில் வீக்கம் கைகால்களில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உடலுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கிறது. எனவே தினமும் காலையில் 3 முதல் 4 பச்சை கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்ட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“