scorecardresearch

ரத்த சோகை ஏற்படாமல் இருக்க:  இப்படி கறிவேப்பிலை குழம்பு வச்சு சாப்பிடுங்க

100 கிராம் கருவேப்பிலையில் 108 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் புரோட்டீன், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்த இருக்கிறது.

கறிவேப்பிலை

100 கிராம் கருவேப்பிலையில் 108 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் புரோட்டீன், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்த இருக்கிறது. அதுபோல் வைட்டமின் ஏ, பி, சி, .இ இருக்கிறது. இந்நிலையில் இவ்வளவு சத்துக்களை நமது உடல் பெற இந்த கறிவேப்பில்லை குழம்பை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை- 2 கைபிடி அளவு

மிளகு – 10

 உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன்

மிளகாய் – 2

துவரம் பருப்பு- ஒரு ஸ்பூன்

கடுகு- ஒரு டீஸ்பூன்

புளி – தேவையான அளவு

எண்ணெய்

உப்பு

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கி கொள்ளவும். தொடர்ந்து மிளகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து  அதில் உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய்,  கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து குழம்பு கரைத்து வைத்ததை இதில் கொட்டி தொதிக்க வைக்க வேண்டும். சூப்பரான கறிவேப்பிலை குழம்பு ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Curry leaves kulampu recipe for iron need