சாப்பிடும்போது பலரும் கருவேப்பிலையை எடுத்து ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள், அவர்கள் ஒதுக்கி வைப்பது கருவேப்பிலையை அல்ல அதில் உள்ள சத்துக்களையே ஒதுக்கி வைக்கிறார்கள். கருவேப்பிலை கண் பார்வைக்கு நல்லது என்று கூறுகிறார்கள். அதனால், கருவேப்பிலையை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த கருவேப்பிலை ஊறுகாய் நன்றாக இருக்கும். இந்த கருவேப்பிலை ஊறுகாயை இப்படி செய்தால் சுவையாக இருக்கும், 3 மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
இந்த கருவேப்பிலை ஊறுகாயை சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிடலாம், சாம்பார் சோறு, ரசம் சோறு உடன் இந்த கருவேப்பிலை ஊறுகாயை தொட்டு சாப்பிடும்போது, நல்ல ருசியாக இருக்கும்.
கருவேப்பிலை ஊறுகாய் செய்வது எப்படி
பிரெஷ்ஷான கருவேப்பிலை இலைகள் எடுத்துக்கொள்ளுங்கள், சரியா ஒரு 120 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கருவேப்பிலையை நல்லா கழுவிட்டு ஒரு டவல்ல போட்டு ஈரம் போகிற அளவுக்கு பொத்தி வையுங்கள், எல்லா ஈரத்தன்மையும் எடுத்த பிறகு, இந்த கருவேப்பிலையை ஒரு கிண்ணத்தை பயன்படுத்தி அளந்து கொள்ளுங்கள்:. உங்க வீட்ல எந்த கப் இருந்தாலும் அந்த கப்ப பயன்படுத்தி அளந்துகொள்ளுங்கள்.
இப்போது 6 கப் கருவேப்பிலையை எடுத்துக்கொண்டுள்ளோம். அதே கப்பில், கால் கப் அளவுக்கு புளி எடுத்துக்கொள்ளுங்கள். புளியில் இருக்கும் நார்களை எடுத்துவிட்டு, சூடா இருக்கக்கூடிய தண்ணீரீல் முழுகுகிற அளவுக்கு ஊறவையுங்கள். 10 நிமிடம் ஊறவிடுங்கள்.
இப்போது, ஊறுகாய்க்கு தேவையான பவுடரை ரெடி பண்ண வேண்டும். அதற்கு ஸ்டவ்வை பற்ற வைத்து ஒரு பான் எடுத்து வையுங்கள். 2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் தனியா அதாவது கொத்தமல்லி விதை, 1 டீஸ்பூன் வெந்தயம் போட்டு, மிதமான தீயில் நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். கடுகு நன்றாக வெடித்துப் பொரிய வேண்டும், கடுகு வெடிக்கவில்லை என்றால் ஊறுகாய் கசக்க ஆரம்பித்துவிடும். நன்றாக வறுத்த பிறகு, வேற ஒரு பிளேட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
இப்போது அதே பானில் 2 டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்த்து, நாம் ஈரம் காய வைத்துள்ள கருவேப்பிலை இலையைப் போட்டு நன்றாக வதக்குங்கள். நன்றாக வதங்கிய பிறகு, கருவேப்பிலை வேறு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, நாம் தயார் செய்து வைத்திருக்கக்கூடிய புளியை ஊற்றி வதக்குங்கள், புளியை கரண்டியால் அழுத்திவிட்டு அதில் இருக்கக்கூடிய தண்ணீர் எல்லாம் சுண்டிப்போகிற அளவுக்கு வதக்குங்கள். நன்றக வதங்கிய பிறகு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புளி, கருவேப்பிலை, கருவேப்பிலை மசாலா மூன்றும் ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, இதனுடன் அதே கப்பில், அரை கப் மிளகாய்தூள், கால் கப் உப்பு அல்லது உங்களுக்கு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து இதை தாளிக்க வேண்டும்.
அடுத்து, ஒரு பானில் 1 1/4 கப் அளவு கடலை எண்ணெய் ஊற்றி காய வையுங்கள், 7 பல் பூண்டு, 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் கடுகு, 1/1 டீஸ்பூன் சீரகம் இவை எல்லாம் பொரிந்து வந்த பிறகு, கொஞ்சமாக பெருங்காயப்பொடி சேர்த்துக்கொள்ளலம். இப்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுங்கள். இப்போது ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுதை சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனுடன் 1 டீஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக கலந்துவிடுங்கள். அவ்வளவுதான், ருசியான கருவேப்பிலை ஊறுகாய் தயார். இதை ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.