நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், முடி வளர்ச்சிக்கு உடவும், கண் பார்வையை தெளிவாக்கும் இப்படி அதீத மருத்துவ குணங்கள் நிறைந்த கருவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். மூன்று மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்க கூடிய அளவிற்கு கருவேப்பிலை தொக்கு செய்வது பற்றி டுடேஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியதாவது,
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
புளி
கடுகு
கொத்தமல்லி
வெந்தயம்
எண்ணெய்
மிளகாய் தூள்
உப்பு
பூண்டு
எண்ணெய்
கடலை பருப்பு
சீரகம்
பெருங்காயத்தூள்
செய்முறை
தேவையான அளவு கருவேப்பிலை இலைகள் எடுத்து நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு புளி எடுத்து சுடுதண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் கடுகு, கொத்தமல்லி, வெந்தயம் மூன்றையும் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து ஆறவைக்கவும். அதேபோல கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் இதை தனியாக எடுத்து ஆற் வைத்து விட்டு புளியையும் இதே போல தண்ணீரோடு கடாயில் சேர்த்து ஒரு தொக்கு மாறி வரும் வரை கொதிக்க விடவும்.
கருவேப்பிலை ஊறுகாய் 3 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது | ஊறுகாய் | Curry Leaves Pickle tamil
இப்போது வறுத்து வைத்துள்ள மசாலாக்கள், புளி, கருவேப்பிலை மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து எண்ணெய் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டி போட்ட பூண்டு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து பொரித்து வரும்போது கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம். மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.