வேலைக்கு செல்லும் பெண்கள் பேச்சுலர்ஸ் என அனைவருக்கும் சாதம், இட்லி தோசை செய்வது ஈஸியான ஒன்றுதான். ஆனால் அதற்கு குழம்பு என்ன செய்வது என்பது தான் நிறைய பேருக்கு தெரியாது.
இனி அந்த கவலை வேண்டாம் அனைத்திற்கும் ஏற்றார்போல ஒரு இன்ஸ்டண்ட் பொடி இருந்தாலே போதும். சமையலை முடித்து விடலாம். அதுவும் சத்தாக இருந்தால் போதும். அப்படிப்பட்ட ஒரு இன்ஸ்டண்ட் மிக்ஸ் பற்றி ஹோம்குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
புளி
பூண்டு - 5 பற்கள்
கல் உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிமினி இட்லி
கறிவேப்பிலை பொடி - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து, அதில் கொத்தமல்லி, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai Idli Podi | Curry Leaf Podi | Idli Podi |
பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும். பின்னர் இந்த கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைக்கவும்.
இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். அடுத்ததாக ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் மினி இட்லி சேர்த்து கலந்து விடவும். அடுத்து கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து விடவும். இறுதியில் நெய் சேர்த்து கலந்து விடவும்.
இன்னொரு டிஷ் இதேபோல இந்த டிஷ் வைத்து மதியம் சாதம் கிளறி சாப்பிடலாம். லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விடலாம்.