மணமணக்கும் கறிவேப்பிலை பொடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 2 கப்
சிவப்பு மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 பிஞ்ச்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலை இலைகளை சுத்தமாக கழுவி பேப்பர் விரித்து அதில் உலர வைக்கவும். உளுத்தம்
பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் மிளகாயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காய் சேர்த்தப்பின் பெருங்காயம் சேர்க்கவும். இவற்றை எல்லாம் சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
முதலில் சிவப்பு மிளகாய், தேங்காய், பெருங்காயம் , உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். பின்னர் கடைசியாக உளுத்தம் பருப்பை சேர்த்து அரைக்கவும். அவ்வளவு தான் சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி. தோசை, இட்லி மற்றும் சுடு சாப்பாட்டிற்கு நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”