scorecardresearch

எவ்வளவு முயற்சித்தும் உடல் எடை குறையவில்லையா ?.. அப்போ இந்த 5 உணவில் சேர்த்துகோங்க.

உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடல் பயிற்சி இப்படி பல்வேறு முயற்சிகள் செய்தும் உங்களுக்கு உடல் எடை குறைவதில் சிக்கல் இருக்கிறதா? நீங்கள் எங்கோ தவறு செய்திருப்பீர்கள். ஆனால் நமது சமையலறையில் இருக்கும் இந்த இலைகளை தொடர்ந்து உணவுகளில் சேர்த்துக்கொண்டால், குறைந்த விலையில் உடல் எடையை குறைக்க முடியும்.

நீங்கள் தீவிரமாக உடல் எடையை குறைக்க முயற்சித்திருப்பீர்கள். உணவுக் கட்டுபாடு, கடுமையான உடல் பயிற்சி இப்படி பல்வேறு முயற்சிகள் செய்தும் உங்களுக்கு உடல் எடை குறைவதில் சிக்கல் இருக்கிறதா? நீங்கள் எங்கோ தவறு செய்திருப்பீர்கள். ஆனால் நமது சமையலறையில் இருக்கும் இந்த இலைகளை தொடர்ந்து உணவுகளில் சேர்த்துக்கொண்டால், குறைந்த விலையில் உடல் எடையை குறைக்க முடியும்.

கருவேப்பிலை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். இதன் வாசனை எப்படி நம்மை சுண்டி இழுக்கிறதோ. இதில் இருக்கும் சத்துக்களும் உடல் பருமன் வராமல் தடுக்கிறது. கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயை குணப்படுத்துவதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.

ஆரிகனோ (oregano)

இது ஒரு இத்தாலி வகை உணவு. இதில் இருக்கும் சத்துக்கள் இன்சுலின் அளவை சீராக வைக்கிறது. மேலும் நமது உடல் சரியான வடிவத்தில் இருக்க உதவுகிறது. மேலும் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதுடன், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது.

பார்ஸ்லே (parsley)

இந்த இலை வகை இயற்கையாகவே  உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் இதை வீட்டு தோட்டத்திலே வளர்க்க முடியும். நமது உடலில் இருக்கும் தண்ணீர் அளவு, சக்கரை அளவை சீராக வைத்துக்கொள்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து அசீரனத்தால் வயிறு உப்பி இருப்பதை தடுக்கிறது.

கொத்தமல்லி

சாம்பார் முதல் சாலட் வரை அனைத்திலும் கொத்தமல்லி சேர்த்துக்கொள்கிறோம். இதற்கு இருக்கும் மனம் போல தனிச்சிறப்பு இருக்கிறது. இதில் மெக்னீஷியம், வைட்டமின் பி,,ஃபோலிக் ஆசிட்  (folic acid ) இருப்பதால் உடல் எடை குறைய அதிகம் உதவுகிறது.

ரோஸ்மேரி (rosemary)

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்  புதிய செல்களை உருவாக்குகிறது. முன்பெல்லாம் இதை வைத்து பாரம்பரிய மருந்துகளை செய்வது வழக்கம். இதில் இருக்கும் சத்து நமது உடல் நீர் தன்மையை இழக்கமல் இருக்க உதவுகிறது, மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Curry leaves to coriander leaves for weight loss foods

Best of Express