வெயிலுக்கு இதமாக குடிக்க வீட்டிலேயே சர்பத் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். நிறைய சர்பத் வகைகள் இருந்தாலும் கொஞ்சம் ருசியாகவும் கடைகளில் கிடைப்பது போன்று வெரைட்டியான சர்பத் செய்வது பற்றி பார்ப்போம். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கஸ்டர்ட் சர்பத் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பால்
வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்
சர்க்கரை
வேகவைத்த ஜவ்வரிசி
சப்ஜா விதைகள்
ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
மாம்பழ ஜெல்லி
செய்முறை:
முதலில் ஜெல்லி செய்ய நீரை சூடாக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் சூடான நீர், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ் மற்றும் மற்றொரு பாத்திரத்தில் சூடான நீர், மாம்பழ ஜெல்லி கிரிஸ்டல்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
இரண்டையும் 1 மணி நேரம் ஆறவிட்டு பிரிட்ஜில் வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
பின்பு ஒரு கடாயில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் கரைத்து வைத்த கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து நன்கு கிளறவும். 5 நிமிடம் கொதித்ததும் ஆறவிட்டு 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
சர்பத் ரெசிப்பீஸ் | Sarbath Recipes In Tamil | Kulukki Sarbath | Custard Sharbat |
சப்ஜா விதைகளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும். தயாரான ஜெல்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுத்து ஒரு கிளாசில் வேகவைத்த ஜவ்வரிசி, ஊறவைத்த சப்ஜா விதைகள், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி, மாம்பழ ஜெல்லி மற்றும் குளிர்ச்சியான கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து கலக்கவும்.
இறுதியாக மேலே பாதம், பிஸ்தாவை தூவி ஜில்லென்று பரிமாறலம். அவ்வளவு தான் வெயிலுக்கு ஏற்ற குளுகுளு கஸ்டர்ட் சர்பத் ரெடி.